டெல்லியில் மது வழங்கி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 ஆண்கள்
டெல்லியில்(Delhi) 13 வயது சிறுமியை மது குடிக்க கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வங்கி ஊழியர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு டெல்லியின் ராஜா விஹாரில்(Raja Vihar) உள்ள ஒரு காலியான வீட்டிற்கு வங்கி ஊழியர் ரிஷப்(Rishabh) மற்றும் உள்ளூர் சலூன் உரிமையாளர் நரோட்டம்(Narottam) ஆகியோர் இளம்பெண்ணை அழைத்துச் சென்று மது குடிக்க கட்டாயப்படுத்தி பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை தொடர்ந்து போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை துணை ஆணையர் ஹரேஷ்வர் சுவாமி(Hareshwar Swamy) குறிப்பிட்டுள்ளார்.





