எகிப்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழப்பு!
தென்மேற்கு எகிப்தில் பயணிகள் பேருந்தொன்றுடன், லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை.
வேகம் மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது
(Visited 6 times, 1 visits today)