ஐரோப்பா

அயர்லாந்தில் 13 வீடுகளில் திடீர் சோதனை – 44 பைக்குகள் பறிமுதல்! 05 பேர் கைது!

அயர்லாந்தில் போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக பொலிஸார் திடீர் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

டப்ளினின் பாலிமுன் (Ballymun area of Dublin) பகுதியில் உள்ள  13 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஐந்து பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் 19 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

இந்த சோதனைகளின் விளைவாக சாலை போக்குவரத்து சட்டம் 2023 இன் கீழ் 44 சட்டவிரோத பைக்குகள் மற்றும் ஸ்க்ராம்ப்ளர்கள் (scramblers)  பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 18 இ-ஸ்கூட்டர்கள், 14 இ-பைக்குகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், மூன்று சரோன்கள் மற்றும் ஏழு மினி குவாட் பைக்குகள் ஆகியவை அடங்கும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பெருமளவான போதைப்பொருள், ரொக்கப்பணம் மற்றும் ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!