இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொலை: 12 பேருக்கு மரண தண்டனை!

அரகலய என்றழைக்கப்படும் மக்கள் போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி Amarakeerthi Athukorala கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கே கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 41 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 37 பேர்தான் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்கள்.

மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருவர் 12 பேருக்கும் மரண தண்டனை விதித்தனர். ஒருவர் 37 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், மேலும் நால்வருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 23 பேர் வழக்கிலிருந்து நிரபராதிகளாக கருதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், காலி முகத்திடலில் (கோல்பேஸ்) அறவழியில் போராடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள்மீது ராஜபக்ச அணியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பலரும் களமிறங்கினார்கள். நாடு முழுவதும் வன்முறையும் வெடித்தது.

இந்நிலையில் நிட்டம்புவ நகரில் வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

கொழும்பில் இருந்து தமது ஊர் நோக்கி செல்லும் வழியிலேயே குழுவொன்றினால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!