ஆசியா

மலேசியாவில் தன் 112ஆவது வயதில் 8வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் மூதாட்டி!

112 வயதான சிட்டி ஹவா என்ற மூதாட்டி, தன்னுடைய 8 வது திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் தும்பட் (Tumpat) பகுதியில் வசித்து வருபவர் சிட்டி ஹவா (Siti Hawa) என்ற 112 வயது மூதாட்டி. சிட்டி ஹவா இதற்கு முன்னதாக 7 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார், அதில் சில கணவர்கள் உயிரிழந்து விட்டனர். மற்ற கணவர்கள் விவாகரத்து பெற்றுக் கொண்டுவிட்டனர். தற்போது 58 வயதாகும் அவரது இளைய மகனுடன் சிட்டி ஹவா வாழ்ந்து வருகிறார். இவருக்கு 5 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள் மற்றும் 30 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள யாருக்காவது விருப்பமிருந்தால், அதற்கு முன்வருமாறு அவர் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால் அது அவருடைய 8வது திருமணம் ஆகும். மேலும் தனக்கு சிறியளவில் பார்வை குறைபாடு மட்டும் இருப்பதாகவும், ஆனால் தினசரி மற்ற வேலைகளை பார்ப்பதாகவும், முழு ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது நீண்ட ஆயுளுக்கு எந்தவொரு ரகசியமும் இல்லை என்றும், வெள்ளை அரிசியும், தண்ணீரும் மட்டுமே உபயோகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மூதாட்டியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய தயாராக இருப்பவர்கள் உடனே அணுகலாம்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content