ஐரோப்பா

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுவனை கடத்தி அதிர்ச்சி கொடுத்த கும்பல்

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை கடத்தி வைத்து, அவனது பெற்றோரிடம் பணம் கோரிய மூவர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 26 ஆம் திகதி இடம்பெற்ற போதும், இது தொடர்பான தகவல்களை தற்போதே பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நள்ளிரவு Blanc-Mesnil நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மூவர் கொண்ட குழு ஒன்று, அங்கு வசித்த சிறுவன் ஒருவரையும், அவனது தாயையும் மிரட்டி பணம் கோரியுள்ளனர். பின்னர் சிறுவனை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் சிறுவனின் தயாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு, 86,000 யூரோக்கள் பணத்தினை கோரியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த 93 ஆம் மாவட்ட பொலிஸார் மறுநாள் மாலை Bobigny இல் வைத்து குறித்த சிறுவனை மீட்டனர். அத்தோடு கடத்தல்காரர்களையும் கைது செய்செய்தனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!