வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் ஏற்பட்டுள்ள நன்மை
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதம் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாதத்தில் 54 கோடியே 10 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி அனுப்பி இலங்கைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 27 கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியினுள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 15 பெர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதேபோன்று கடந்த ஜூன் மாதம் இலங்கை வந்;திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 388 ஆக பதிவாகியுள்ள நிலையில், ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கும் நிலையில், இந்த வருட ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் 21 கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி வருவாய் பெறப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.