லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 11 பேர் மரணம்
தெற்கு லெபனானில்(Lebanon) உள்ள பாலஸ்தீன(Palestinian) அகதிகள் முகாமில் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடலோர நகரமான சிடோனின்(Sidon) புறநகரில் உள்ள ஐன் எல்-ஹில்வே(Ein el-Hilweh) அகதிகள் முகாமில் உள்ள ஒரு மசூதியின் வாகன நிறுத்துமிடத்தில் ட்ரோன் ஒரு காரைத் தாக்கியதாக அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸின் பயிற்சி மையத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)




