ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் புறநகரான Bruyères-sur-Oise (Val-dOise) நகரில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக்கப்போரைச் சேர்ந்த இந்த வெடிகுண்டு செயற்படும் நிலையில் உள்ளது.

வீடு கட்டுமானப்பணியின் போது மண் தோண்டப்பட்டபோது இந்த வெடிகுண்டு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி குறித்த வெடிகுண்டு செயலிக்கச் செய்யப்பட உள்ளதாக அறிய முடிகிறது. அன்றைய நாளில் காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரை அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற பணிக்கப்பட்டுள்ளனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!