சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவப்படையினருக்கும் இடையில் மோதல்!
சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
துணை ராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் ராணுவம் கூறியிருந்தது.
இந்நிலையில் இது குறித்து சூடானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூடானின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் தொடர்கின்றன. எனவே சூடானில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)