ஐ.நா. காலநிலை மாநாட்டை நடத்தும் வாய்ப்பு துருக்கி வசம்!
COP31 எனப்படுகின்ற ஐ.நா. காலநிலை மாநாட்டை நடத்தும் வாய்ப்பை துருக்கி பெற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குரிய மேற்படி மாநாட்டை தமது நாட்டில் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் போட்டி இட்டன.
எனினும், போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா தற்போது விலகியுள்ளதால் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு துருக்கி வசமாகியுள்ளது.
COP30 ஆவது மாநாடு தற்போது துருக்கியில் நடந்துவருகின்றது. இதன்போது அடுத்த மாநாடு எங்கு என்பது பற்றி முடிவெடுக்கப்படவேண்டிய நிலை இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் துருக்கிக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு போட்டியின்றி ஜேர்மன் வசம் செல்ல இருந்தது.
இந்நிலையிலேயே ஆஸ்திரேலியா விட்டுக்கொடுப்பை செய்துள்ளது. எனினும், மாநாட்டில் பசுபிக் தீவு நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஆஸ்திரேலியா முன்வைத்துள்ளது.





