எதிர்பார்ப்புகளை விட அதிகளவில் வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்
 
																																		இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வலுவடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு 3.1 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை அடைய இலங்கையால் முடியக்கூடும் என நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிலின் (Thomas Helbling) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் ஆசிய பசுபிக் பிராந்தியம் தொடர்பான பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டத்தை வெளியிட்டுப் பேசினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் அமுலாக்கும் பரந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் கட்டியெழுப்பப்படும் எனவும் தோமஸ் ஹெல்பிலின் நம்பிக்கை தெரிவித்தார்.
(Visited 6 times, 6 visits today)
                                     
        



 
                         
                            
