ஆசியா செய்தி

ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது..!

மலேசியாவின் 2020 முதல் 2021 வரை பிரதமராக இருந்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக முகைதீன் யாசின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊழல் வழக்கில் முகைதீன் யாசினை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் ஊழல் வழக்கில் 20 ஆண்டுகளும், பணமோசடி செய்ததற்காக 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

பதவியை விட்டு விலகிய பின்னர் குற்றம் சுமத்தப்படும் 2வது பிரதமர் முகைதீன் யாசின் ஆவார். ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content