இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – பலர் பலி!
இந்தியாவின் புனேவில் இரண்டு லொறிகளும் ஒரு காரும் நேருக்கு நேர் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்திற்குப் பிறகு லொறி தீப்பிடித்து எரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் நிறுத்தப்பட்டு, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இருப்பினும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)




