அரசியல் இலங்கை

லண்டன் உரை இரத்து குறித்து நாமல் அதிருப்தி

லண்டனில் திட்டமிடப்பட்ட தமது உரைகள் இரத்து செய்யப்பட்டமை துரதிஷ்டவசமான சம்பவம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச x தளத்தில் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் விவாதங்களை தீர்க்கும் இடங்களாக அமைய வேண்டுமே தவிர, அச்சுறுத்தல்கள் மூலம் அதனை மௌனிக்க செய்ய கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பல தலைமுறை அனுபவத்தை கொண்ட பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவிருந்த பகிரங்க விவாதங்களில் உரையாற்ற தாம் மிகுந்த ஆவலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தனது கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பவர்களுடன், நேரடி விவாதத்தை தாம் வரவேற்பதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

இதேவேளை, Oxford மற்றும் Cambridge பல்கழைக்கழகங்களின் விவாத நிகழ்வுக்கு, தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, எதிர்காலத்தில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!