காலி: ஒரே குடும்பத்தில் இருவர் வெட்டிக்கொலை – சிறுவன் உயிர் தப்பியது எப்படி?
காலி மாவட்டத்தின் மாவடவில பகுதியில் உள்ள வீட்டிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சடலங்கள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்டதாக தெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெட்டுக் காயங்களுக்கு உள்ளான பெண்ணொருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளில் வயதான பெண்ணொருவரும், 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், அதே வீட்டில் 17 வயதான சிறுவன் காயங்கள் எதுவுமின்றி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வயதான தாய், அவரது மகள் மற்றும் மருமகன் என நம்பப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை தெலிகட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





