உயர்நிலை பள்ளி மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ்வில் அதிகரிக்கும் பதற்றம்
உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள பள்ளி மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளி மீது ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல் தலைநகர் கீவ்-வுக்கு தெற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மீது நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில அவசர சேவை டெலிகிராமில் தெரிவித்துள்ள தகவலில், ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார், நான்கு பேர் இடிபாடுகளுக்கு அடியில் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மாணவர்கள் படிப்பதற்காக பயன்படுத்தப்படும் கட்டிடம், மற்றும் மாணவர் குடியிருப்பின் இரண்டு தளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளியில் 300 சதுர மீட்டருக்கு பரவிய தீயை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு முன்னதாக அவசர சேவை ஊழியர்கள் அணைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.