Site icon Tamil News

இந்தியாவில் மூன்று கோடி முதல் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது

கடந்த இரண்டு ஆண்டுகளில் நீதி மற்றும் சட்டத்துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது விரைவில் சட்டமன்றம் நீதித்துறையில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளது…. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

இந்தியாவில் மூன்று கோடி முதல் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது

நீதித்துறையில் மூன்று வருட காலத்தில் புரட்சி மற்றும் சீர்திருத்தம் நடக்க உள்ளது காகிதம் இல்லாத நீதிமன்றங்கள் மாற்றப்பட உள்ளன விரைவில் கொண்டுவரப்பட்டுள்ள ஹைபிரிட் மோடு என்ற புதிய திட்டத்தின்.

கீழ் உச்ச நீதிமன்றத்தில் இங்கிருந்தபடியே வழக்குகளை நடத்தலாம்…. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ராஜா பேச்சு.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றமும் பொன்னமராவதி மற்றும் கரம்பக்குடியில் மாவட்ட முனிசிப் மற்றும் குற்றவியல் மேஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும் புதுக்கோட்டையில் இருந்து காணொளி.

காட்சி மூலமாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார் எஸ் எஸ் சுந்தர் ஆகியோர்  திறந்து வைத்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி.

தமிழகத்தில் நீதித்துறை மற்றும் சிறை துறையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் விளங்குகிறது.

விரைவில் இன்னமும் சீர்திருத்தம் செய்ய உள்ளோம்.

நிதி நெருக்கடியில்  இருந்து தற்போது தான் தமிழகம் மீண்டு வருகிறது நிதிநிலைமை சரியான உடன் வழக்கறிஞர் சேம நலநிதி உயர்த்தப்படும் கடந்த ஆண்டுதான் வழக்கறிஞர்களின் சேமநல நிதி உயர்த்தப்பட்டது.

நிதிநிலைமை சரியாக இல்லாததால் பல துறைகளில் நிதி குறைக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் சட்டத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.

தமிழக முதல்வர் சட்டத்தை மதிக்க கூடியவராக செயல்படுகிறார்.

அதனால்தான் சட்டம் நீதித்துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார்.

விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா.

காலங்கள் மாறி வருகிறது 40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் நீதிமன்றங்கள் தற்போது இல்லை.

இந்தியாவில் 3 கோடி முதல் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளை முடிப்பதற்கு பத்து வருட காலங்களாகும்.

வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நேரத்தை  ஏன் குறைக்க கூடாது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

வக்கீல்கள் நீதிபதி முன்பு சுருக்கமாக வாதாட வேண்டும்.

மூன்று நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்களுக்குள் தங்களுடைய வாதங்களை வக்கீல்கள் முடித்து கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டையில் விரைவில் வணிக நீதிமன்றம் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே வணிக நீதிமன்றங்கள் சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ளது.

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்குகள் தற்போது வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நடத்தப்படுகிறது.

நீதித்துறையில் மூன்று வருட காலத்தில் புரட்சி  மற்றும் சீர்திருத்தம் நடக்க உள்ளது.

காகிதம் இல்லாத  நீதி மன்றங்கள் மாற்றப்பட உள்ளன.

ஹைபிரிட் மோட் என்ற புதிய திட்டமும் உருவாக்கப்பட உள்ளது இந்த திட்டத்தின் மூலமாக புதுக்கோட்டையில் இருந்தபடியே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தலாம்.

சட்டங்கள் மாறி வருகிறது.

தற்போது உள்ள வக்கீல்களின் குமாஸ்தாக்களுக்கு உள்ள வாதத் திறமையை விட வக்கீல்களுக்கு குறைவாகவே உள்ளது வாத திறமைகளை வக்கீல்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் வழக்கறிஞர்கள் விழிப்பாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வாதாடும்போது நீதிபதியிடம் கோபத்தை காட்டக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version