வடக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி
ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தில் ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தலிபான் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் உள்ள தபியன் ஃபர்ஹாங் மையத்தில் காலை 11 மணியளவில் விருது வழங்கும் நிகழ்விற்காக பத்திரிகையாளர்கள் கூடியிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தலிபான்களால் நியமிக்கப்பட்ட பால்க் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசிரி தெரிவித்தார்.
பால்கின் இரண்டாவது போலீஸ் மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது, என்று அவர் கூறினார். காயமடைந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக வசிரி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.
மஸார்-இ-ஷெரீப்பில் குண்டுவெடித்து மாகாண ஆளுநர் தாவுத் முஸ்மல் மற்றும் இருவர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. நால்வர் காயமடைந்தனர்.