உலகம்

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு கடற்பகுதியில் – அதிகரிக்கும் பதற்றம்!

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் ( USS Gerald R Ford) மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  இது அமெரிக்கா – ஈரான் உறவில் அதகரித்து வரும் பதற்றத்தை குறிக்கிறது.

இந்த போர்க்கப்பல், துணை கப்பல்களுடன், வரும் நாட்களில் கரீபியன் தீவுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் உறுதி செய்யப்படாவிட்டால், இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப்  முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதாவது அணுசக்தி மற்றும் ஏவுகணைகள் அற்ற ஒரு ஒப்பந்தத்தை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், ஈரான் அணுசக்தி திறன்களை விரிவுபடுத்த முயற்சிக்கவில்லை என்று வலியுறுத்திய போதிலும், ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் ஒருவர், நாட்டின் ஏவுகணை திறன்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல என்று உறுதிப்படுத்தினார்.   
இதற்கிடையே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  (Benjamin Netanyahu) வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இவ்வாறான ஒரு சிக்கலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் குறித்த கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது பதற்றத்தை குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!