இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களை கைவிடோம்: ஜனாதிபதி உறுதி

“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு காணி வாங்குவதற்கும், வீடு அமைப்பதற்கும் நிதி வழங்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,

தம்முடன் தற்போது வாழவேண்டியவர்களை நாம் இழந்து தவிக்கின்றோம். சில பகுதிகளில் கிராமங்களே மூழ்கியுள்ளன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் உயிரிழந்திருந்தாலும் இன்னும் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

காணாமல்போயுள்ளவர்களை உறவுகள் தேடுகின்றனர். நாம் கவலை அடைகின்றோம்.

இறந்தவர்களை எம்மால் மீள வழங்க முடியாது. ஆனால் அவர்களின் உறவுகளுக்கு சிறந்ததொரு நாட்டை கையளிக்க முடியும். அதற்குரிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது.

அனர்த்தங்கள் உயிர்களை, உடமைகளை பறித்தாலும் எமது மக்கள் மத்தியில் உள்ள மனிநேயத்தை பறிக்க முடியாது என்பது மீண்டும் உறுதியானது.

மக்கள் தம்மால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் எல்லா வழிகளிலும் உதவி வருகின்றனர். இலங்கையர்களாக இது பெருமையளிக்கின்றது.

மக்களுக்கான சிறப்பான சேவையை வழங்கிய முப்படையினர், பொலிஸார், அரசாங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு நன்றிகள்.

படையினர் உயிர் தியாகம்கூட செய்துள்ளனர். இவர்கள் நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.

நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்காக உதவி செய்த வெளிநாடுகளுக்கு நன்றிகள்.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையை எதிர்கொள்வதற்காகவே சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும் அரசமைப்பை மீறி நாம் செயல்படவில்லை.

மக்களின் உரிமையை மீறும் வகையில் நாம் இச்சட்டத்தை பயன்படுத்தமாட்டோம்.

எம்மை விமர்சிப்பவர்களுக்கு எதிராக நாம் இச்சட்டத்தை பயன்படுத்த மாட்டோம்.மக்களுக்காகவே அதனை பயன்படுத்துவோம்.

கம்பளையில ; ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர் என எம்.பியொருவர் கூறினார். நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் ஒளிந்துகொண்டேஇதனை சொன்னார்.

வெளியில் வைத்து இந்த கருத்தை வெளியிட்டிருந்தால் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். எதிரணியில் இருந்தாலும் சிலர் பொறுப்புடன் செயல்பட்டனர்.

மேலும் சில எதிரணி அரசியல் வாதிகள் அனர்த்தத்திலும் அரசியல் செய்தனர்.

புதிய வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படமாட்டாது. நாட்டை மீட்பதற்குரிய எமது திட்டத்தின் ஓரங்கம்தான் வரவு- செலவுத்திட்டமாகும்.

எனவே, ஒதுக்கீடுகளை உரிய வகையில் பயன்படுத்தலாம். ஒதுக்கீட்டில் அனர்த்த நிலைமை மீட்புக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு உதவிகள் வழங்கப்படும். “ – என்றார் ஜனாதிபதி அநுர.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!