விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெறக்கூடாது: முன்னாள் வீரர்கள் கோரிக்கை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது என்று அணியின் முன்னாள் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நவ்ஜோத் சித்து கூறும்போது, “விராட் கோலி ஓய்வு பெற விரும்பும் விஷயம், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் ஓய்வு பெற விரும்பும் நேரம் சரியானதாக இல்லை. ஏனெனில் தற்போது நாம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஒரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்கிறோம். இங்கிலாந்தில் விராட் கோலி இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்

பொதுவாக பழைய விஷயங்கள் கண்டிப்பாக மாற வேண்டும். அப்போதுதான் புதிய விஷயங்கள் பயன் அளிக்கும் என்று கூறுவார்கள். அந்த நோக்கத்தை விராட் கோலி சரியாக பின்பற்றுகிறார். ஆனால் நேரமும் சந்தர்ப்பமும் தற்போது பொருத்தமாக இல்லை. எனவே, அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக்கூடாது” என்றார்.

சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும்போது, “இந்திய கிரிக்கெட்டுக்கு, குறிப்பாக சிவப்பு பந்து வடிவத்தில், விராட் கோலி தேவை. அவரைச் சுற்றி ஒரு இளம் அணியை உருவாக்க உதவ வேண்டும். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடாது” என்றார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!