ஈரானின் ராணுவ வலிமை அழியவில்லை: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் அந்நாட்டின் ராணுவ இன்னும் வலிமை முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிடம் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆளில்லா விமானங்கள் எஞ்சியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் ஆயுதக் கிடங்குகள் பெருமளவு சிதைக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு மாறாக உளவுத் தகவல்கள் இருக்கின்றன.
அதேவேளை, தமது உண்மையான ராணுவ வலிமை எதிரி நாடுகளுக்கு சரியாக தெரியவில்லை என ஈரான் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





