அமெரிக்காவில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ள உச்சநீதிமன்றம்!

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இருப்பினும் நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாய்வழி வாதங்களைக் கேட்பது, உத்தரவுகள் மற்றும் கருத்துக்களை வெளியிடுவது, வழக்குத் தாக்கல்களைச் செயலாக்குவது மற்றும் அந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான காவல்துறை மற்றும் கட்டிட ஆதரவை வழங்குவது போன்ற அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கருவூலத்துறை நிதி பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தை மட்டும் பாதிக்கவில்லை. முழு கூட்டாட்சி நீதித்துறையும் பாதிக்கிறது.
கூட்டாட்சி நீதிபதிகள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் மற்றும் ஊதியம் பெறுவார்கள், ஆனால் சில ஊழியர்கள் ஊதியத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கு நிதியளிக்கவும் மற்றும் பணிநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் செலவீன சட்டமூலம் 10 ஆவது முறையாக தோல்வியை தழுவியது. இதன்காரணமாக பல அரச ஊழியர்கள் சம்பளத்தை இழந்துள்ளனர்.
குறிப்பாக 4000 ஊழியர்கள் சம்பளத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காவல்துறையினரும் ஊதியத்தை பெறவில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும் இராணுவம் மற்றும் FBI எனப்படும் புலனாய்வு துறை மட்டும் ஊதியத்தை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.