ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – அதிக வாடகை செலுத்த வேண்டிய நிலை

ஜெர்மனியில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜெர்மன் குடிமக்களை விட அதிக வாடகை செலுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

சராசரியாக, அவர்கள் ஜெர்மனியர்களை விட சதுர மீட்டருக்கு 9.5% அதிகமாக வாடகை செலுத்துகின்றார்கள்.

ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டினர் சதுர மீட்டருக்கு சுமார் 7.75 யூரோ செலுத்துகின்ற போதும், ஜெர்மனியர்கள் 7.08 யூரோக்களை மாத்திரமே செலுத்துகின்றனர்.

இது தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற பயன்பாட்டு செலவுகள் அற்ற அடிப்படை வாடகை ஆகும்.

ஜெர்மனியர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்து வருவதால் குறைவாகவே செலுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வாடகைக்கு குடியிருக்கும் வெளிநாட்டினர் கூட அதிகமாக வாடகை செலுத்துகிறார்கள்.

வெளிநாட்டினர் பொதுவாக சிறிய வீடுகளை வாடகைக்கு எடுக்கிறார்கள். சிறிய வீடுகள் பெரும்பாலும் சதுர மீட்டருக்கு அதிக விலையைக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, 60 சதுர மீட்டருக்குக் குறைவான வீடுகள் பெரிய வீடுகளை விட ஒரு மீட்டருக்கு அதிக விலை கொண்டவை.

இதனாலேயே வெளிநாட்டவர்கள் அதிக வாடகையை செலுத்துகின்றனர்.

சராசரியாக, ஜெர்மானியர்கள் சுமார் 110 சதுர மீட்டர் வரையான பெரிய வீடுகளில் வசிக்கின்றனர்.

இதனால், ஜெர்மானியர்களின் வாடகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்