அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ஓரியன்’விண்கலம்!

‘ஓரியன்’ விண்கலத்தை Orion Spacecraft வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது நாசா NASA.

நிலவை ஆய்வு செய்யும் பணிக்காகவே இதற்குரிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம்.

இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969 ஆம் ஆண்டில் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.

இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா தொடங்கியது.

2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. எனினும், அந்த முயற்சி பல்வேறு காரணங்களால் தாமதமானது.

இந்நிலையிலேயே தடைகளை எல்லாம் தாண்டி ‘ஆர்டெமிஸ் -2’ இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க மற்றும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர்.

அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் (விண்வெளி வீராங்கனை) மற்றும் கனடாவின் ஜெர்மி ஹன்சன் ஆகிய விண்வெளி வீரர்கள் அடங்கியுள்ளனர்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்புவதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம் முதல் நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையை சுற்றிவந்த பின்னர் நிலவை நோக்கி செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் ‘ஓரியன்’ விண்கலம் நிலவை சுற்றி வந்த பின்னர் பூமிக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!