18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்படி சந்திப்பும் இடம்பெறுகின்றது. அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவும் கூடவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் நோக்கிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண […]




