செய்தி

வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் யாழில் கைது!

  • February 6, 2026
  • 0 Comments

யாழ். வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு […]

இலங்கை செய்தி

டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: விநியோகித்த மூவர் கைது!

  • January 17, 2026
  • 0 Comments

டுபாயில் பதுங்கி இருந்து இலங்கையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நிழல் உலக தாதா டுபாய் இஷாரவின் மூன்று சகாக்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டம், கம்பளை பகுதியில் வைத்தே கம்பளை பொலிஸாரால் இன்று (17) காலை இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் சகிதம் சிக்கியுள்ள இவர்களிடம் தற்போது பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் டுபாய் இஷார என்பவரின் போதைப்பொருளை கம்பளை பகுதியில் இவர்களே […]

அரசியல் இலங்கை கல்வி

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, இளைய மகனுக்கு மறியல்!

  • January 5, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சதொசவுக்குரிய லொறியொன்றை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் […]

அரசியல் இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்: இடதுசாரி கட்சிகள் அதிரடி!

  • January 5, 2026
  • 0 Comments

“அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். வெனிசுலாமீதான ட்ரம்பின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இடதுசாரி சக்திகளுடன் இணைந்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் எனவும் அவர் கூறினார். எனினும், திகதி விவரம் தொடர்பான தகவல்களை வாசுதேவ நாணயக்கார வெளியிடவில்லை. “ எண்ணெய் வளம்மீதான பேராசை காரணமாகவே வெனிசுலாமீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளார். ட்ரம்பின் […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ், பிள்ளையான் சிறையில் வாடுவது வலிக்கிறது: மஹிந்த அணி கவலை!

  • January 2, 2026
  • 0 Comments

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். “இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் […]

இலங்கை செய்தி

கஞ்சாவுடன் சிக்கிய அரசியல்வாதி: யாழில் பரபரப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று (30) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் வைத்து அவர் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது பிரதேச […]

இலங்கை செய்தி

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்!

  • December 26, 2025
  • 0 Comments

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு (Police Media Unit) இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையின் பிரகாரம், இராணுவத்தினரால் (military) டக்ளஸ் தேவானந்தாவுக்கு “பிஸ்டல் ரக pistol gun துப்பாக்கியொன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டிருந்த […]

error: Content is protected !!