இலங்கை செய்தி

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் Anura Kumara Dissanayake , மனோ கணேசன் Mano Ganesan தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் Tamil Progressive Alliance (TPA) இடையிலான சந்திப்பு இன்று (2) நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம் P. Digambaram, வி. ராதாகிருஷ்ணன் V. Radhakrishnan உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள் இச்சந்திந்திப்பில் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!