கொள்ளையர்களின் கைவரிசை – 2500 ஆண்டுகள் பழமையான தங்க தலைக்கவசம் மீட்பு!
2,500 ஆண்டுகள் பழமையான , விலைமதிப்பற்ற ரோமானிய காலத்து தங்கத் தலைக்கவசம் இன்று நெதர்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தலைக்கவசம் 2025-ஆம் ஆண்டில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையின் போது திருடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள டச்சு காவல்துறை அதிகாரி கோரியன் ஃபானர் (Corien Fahner), “கோட்டோஃபெனெஸ்டி (Cotofenesti ) தலைக்கவசமும் இரண்டு டேசியன் (Dacian) தங்கக் கைக்காப்புகளும் திரும்பக் கிடைத்துவிட்டன, இதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ருமேனியாவில் இடம்பெற்ற இந்த திருட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், ஒரு மாபெரும் காவல்துறை தேடுதல் வேட்டைக்கும் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





