மகாவலி கங்கையின் அணைக்கட்டை புனரமைக்க நடவடிக்கை
திருகோணமலை(Trincomalee) மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார(W. G. M. Hemantha Kumara) கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சூரியபுர(Suriyapura) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சமகிபுர – வம்மிவுர(Samakipura – Vammivura) பகுதியில் உள்ள மகாவலி(Mahaweli) கங்கையின் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளது. அதனை மீள புனரமைப்பது தொடர்பான கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த அணைக்கட்டினை மீளக்கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை அதிவேகமாக முன்னெடுக்கத் தேவையான அறிவுறுத்தல்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கான பணிகள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் விரைவில் ஆரம்பிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.





