தொழில் அதிபர்களை சந்திக்கிறார் பிரதமர்Keir Starmer!
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் Keir Starmer , முக்கிய தொழில் அதிபர்களை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஈரான் போர்ச் சூழலால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
குறிப்பாக ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் மற்றும் உர விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அரசு மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியைச் சமாளிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் வணிகத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பார் என தெரியவருகின்றது.





