உலகம்

தென் கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 02 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கருப்பினத்தவர்களுக்கான கல்லூரியான தென் கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் இருவர் உயரிழந்த நிலையில் மற்றொரு நபர் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து குறித்த வளாகம் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் முகப்புத்தக பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஹுஜின் சூட்ஸ்  (Hugine Suites) மாணவர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரிகள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களையோ அல்லது காயமடைந்த நபரின் நிலையையோ பல்கலைக்கழக அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட தென் கரோலினா பல்கலைக்கழகம் வரலாற்று ரீதியாக கருப்பின மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகமாகும்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!