ஆசியா செய்தி

இந்தோனேசியாவில் ஒன்லைனில் iPhone வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தோனேசியாவில் ஒன்லைனில் iPhone வாங்கிய பெண்ணுக்கு சர்க்கரைப் பொட்டலம் கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்தப் பெண் இந்தோனேசியாவின் யோக்யக்கார்த்தாவிற்குச் சென்றிருக்கிறார். அவர் இளஞ்சிவப்பு நிறத்தில் iPhone 16 Plus-ஐத் தேடினார்.

அதைக் கடைகளில் கண்டுபிடிப்பது கடினம். அதனால் அதை ஒன்லைனில் வாங்கி அதைத் தம்முடைய வீட்டிற்கு அனுப்பிவைக்க முடிவெடுத்தார்.

வாங்கிய மறுநாள் பொருளும் வந்துசேர்ந்தது. ஆனால் உள்ளே இருந்தது சர்க்கரைப் பொட்டலம். அவர் உடனடியாக விநியோக அலுவலகத்திற்குச் சென்று அதைப் பற்றிக் கேட்டார். ஆனால் அலுவலக ஊழியர்கள் சரியான பதில் தரவில்லை.

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தாக கூறிய பின்னர் அலுவலகம் சம்பவத்தை விசாரணை செய்யப்போவதாகக் கூறியது. ஆனால் விசாரணை முடிவுக்கு வருவதுபோல் அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை.

அதற்குப்பின் கைத்தொலைபேசியை விநியோக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் திருடியது தெரியவந்தது. அந்தப் பெண் கைத்தொலைபேசிக்குச் செலுத்திய தொகை அவரிடம் திரும்பக்கொடுக்கப்பட்டது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி