“போரில் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டோம்”
தற்போதைய சூழலில் மோதல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio நம்பிக்கை வெளியிட்டார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இராஜதந்திர முயற்சிகளுக்குத் தயாராக இருந்தாலும், காலதாமதம் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போலி பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, நேட்டோ கூட்டமைப்பு இன்னும் அமெரிக்காவின் நலன்களுக்குப் பயன்படுகிறதா என்பதை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.





