யாழ். மாநகரசபைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு!
யாழ். நகர அப்பிள் apple கடை வியாபாரிகள் இன்று மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
யாழ். மத்திய பஸ் நிலையச் சூழலில் அமைந்துள்ள அப்பிள் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். நகரில் அமைந்துள்ள அப்பிள் கடைகளின் செயற்பாடுகள் தொடர்பாக உறுப்பினர் ப.தர்சானந்த் சபையில் முன்வைத்த பிரேரணையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், தமது கோரிக்கைகள் மற்றும் நியாயங்கள் அடங்கிய மகஜரை மாநகர சபை உறுப்பினர்களிடம் கையளித்தனர்.
நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தமக்கு ஏற்படும் சவால்கள் மற்றும் குறித்த பிரேரணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இதன்போது அவர்கள் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.





