பொழுதுபோக்கு

கவர்ச்சி ஆயுதம் குறித்து பிரியா வாரியர் கடுப்பு!

சினிமா உலகில் கவர்ச்சி ஆயுதத்தை மட்டுமே நம்பி களமிறங்கி இருக்கிறார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நடிகை பிரியா வாரியர் Priya Warrier நிராகரித்துள்ளார்.

தமிழிழ் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘குட் பேட் அக்லி” போன்ற படங்களில் பிரியா வாரியர் நடித்துள்ளார். மலையாளம், இந்தி சினிமா துறையிலும் கால் பதித்துள்ளார்.

எனினும், தமிழ்ப் படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தலை காட்டி வரும் பிரியா வாரியர் குறித்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

‘பிரியா வாரியர் சிறிய பாத்திரங்களில் நடித்தே காலத்தை தள்ளப் பார்க்கிறார்.

கவர்ச்சி தான் அவரை காப்பாற்றுகிறது. அதனால்தான் சின்ன பாத்திரங்களில்கூட கவர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கின்றார்.

அவர் ஜூனியர் ஆர்டிஸ்ட். கூட்டத்தில் ஒருவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பிரியா வாரியர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

“ உண்மைக்கு புறம்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இதுபோல மோசமான பேர்வழிகளை எதுவுமே செய்யமுடியாது.

லைக்குகளுக்காக இப்படி செய்வதால் என்ன ஆகிவிட போகிறது. இந்த நிலை மாறத்தான் வேண்டும்.” எனவும் பிரியா வாரியர் வலியுறுத்தியுள்ளார்.

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!