இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு ‘அரசியல் பலப்பரீட்சை’! ஆளுங்கட்சி கூறுவது என்ன?

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ Kumara Jayakody தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி மோசடி உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக் கொண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“ குமார ஜயகொடி தற்போதைய பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார். அரச உர நிறுவனத்தில் ஜயகொடி பணியாற்றிய காலத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கே அது.

கொள்முதல் நடைமுறைகளை மீறியதாகக் கூறப்படும் இந்த வழக்கு, ஜயகொடி அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்தது.

தாக்கல் செய்யப்பட்டது என்பதால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டதாக எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!