ஆஸ்திரேலியா செய்தி

ஈரானில் ஆட்சி மாற்றம்: ஆஸ்திரேலிய பிரதமர் கூறுவது என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese நட்பு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றார்.

ஈரானின் ஏவுகணைத் திறனை அழித்தல் மற்றும் அணு ஆயுதப் பயன்பாட்டைத் தடுத்தல் ஆகிய அமெரிக்காவின் இலக்குகள் எட்டப்பட்டாலும், ஆட்சி மாற்றம் என்பதில் பெரும் சிக்கல் நிலவுகின்றது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியம்.” எனவும் Anthony Albanese குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் தனது பங்கிற்கு சர்வதேச நாடுகளுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!