பாகிஸ்தான் ‘பல்டி’ – இந்தியாவுடன் மோத முடிவு!
T -20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் தொடர்பில் தான் எடுத்திருந்த முடிவை பாகிஸ்தான் Pakistan மாற்றியுள்ளது.
இதற்கமைய இந்தியாவுடன் இலங்கை ஆடுகளத்தில் விளையாட அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளது.
T – 20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டி புறக்கணிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது.
எனினும், இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைPakistan Cricket Board , ICC க்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது.இருந்தது.
போட்டியை புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ICC எச்சரித்தது.
இந்நிலையில் ICC குழு நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது.
இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொசின் நக்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தனது முடிவை மாற்றிய பாகிஸ்தான் அரசு, T20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியில் விளையாட தங்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார குமார திஸாநாயக்க மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கோரிக்கைகளை ஏற்று, கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி இந்தப் போட்டியில் பங்கேற்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கையின் கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடுவது உறுதியாகி உள்ளது.





