காசாவில் படுகொலைகள் – பிராந்திய பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேலிய பாதுகாப்பில், மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் இன்று நடத்திய தாக்குதல்களில் சுமார் 54 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
காசாவில் போர்நிறுத்தம் தொடர்வது பிராந்திய பதற்றத்தை குறைக்க உதவும் என்று சீனா கூறியுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம், பலஸ்தீன போராட்டக் குழுவை “பயங்கரவாத அமைப்பு” என்று சட்டவிரோதமாக்கும் அரசாங்க முடிவு தவறானது என்று தீர்ப்பு அளித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக சுமார் 72,045 பேர் உயிரிழந்துள்ளதுடன், 171,686 பேர் காயமடைந்துள்ளனர்.





