இலங்கை செய்தி

மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளருக்கு விளக்கமறியல் உத்தரவு

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

கொம்பனி வீதி மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடு வழங்குவதாகக் கூறி 70 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொம்பனி வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாக கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இரண்டு தடவைகள் காசோலைகள் மற்றும் பணத்தின் ஊடாக இந்த தொகையை சந்தேக நபருக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி, கொம்பனி வீதி பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் இன்று (20) கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

மஹிந்த கஹந்தகம முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!