இலங்கை செய்தி

குஜராத் முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் சந்திப்பு: கேரளா செல்லவும் ஏற்பாடு!

ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva, இந்தியா குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலுடன் Bhupendra Rajnikant Patel பேச்சு நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது என ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பிரகாரமே டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ளார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ் Kitnan Selvaraj , இளங்குரமன் Ilanguraman உள்ளிட்ட குழுவினரும் சென்றுள்ளனர்.

இவ்விஜயத்தின் ஓர் அங்கமாகவே குஜராத் மாநில முதல்வருடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது குஜராத் மாநிலத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கையின் கைத்தொழில், சுற்றுலா மற்றும் ஆடை உற்பத்தித் துறைகளின் மேம்பாட்டிற்காக இணைந்து செயற்படுவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. குழுவினர் இவ்விஜயத்தின்போது கேரளாவுக்கும் செல்லவுள்ளனர். அங்கு மாநில முதல்வருடன் பேச்சு நடத்தவுள்ளனர். கேரளாவில் இடதுசாரி ஆட்சி நிலவுகின்றது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!