விளையாட்டு

மீண்டும் கலைந்தது இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு!

இத்தாலி கால்பந்து அணி உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறும் வாய்ப்பை மூன்றாவது முறை இழந்துள்ளது.

4 தடவைகள் உலகக் கோப்பையை வென்ற பலமான அணியாக இருந்தும், தரவரிசையில் பின் தங்கியுள்ள போஸ்னியா மற்றும் ஹெர்ஸெகோவினாவிடம் தங்கியுள்ள
தோல்வியுற்றது அந்நாட்டு ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறத் தவறியது இத்தாலிய கால்பந்து வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டி எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி முதல் ஜூலை 19-ஆம் திகதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.

முதல் முறையாக இந்த உலக கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக வாய்ப்பை பெற்றன. மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

தகுதி சுற்று மூலம் 39 நாடுகள் ஏற்கனவே நுழைந்து இருந்தன. எஞ்சிய 6 அணிகள் தகுதி பெறுவதற்கான பிளே ஆப் சுற்று நடைபெற்றது.

இத்தொடரிலேயே தோல்வியை தழுவி இத்தாலி வெளியேறியுள்ளது.

 

 

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!