லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானின் தெற்கு பகுதிகளில் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டிலுள்ள இடங்களை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்கள் மற்றும் கடற்கரைகளில் தற்காலிக கூடாரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தெற்கு லெபனானின் சில பகுதிகளில் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை உள்ளூர் மக்கள் மதிப்பிட்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய தாக்குதல்களிலிருந்து, நாடு முழுவதும் பரவலாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலை, அந்தப் பிராந்தியத்தில் மனிதாபிமானப் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.





