ஐரோப்பா செய்தி

மேற்குக் கரையில் அதிகாரங்களை விரிவுபடுத்தப்படுத்த இஸ்ரேல் அனுமதி – சர்வதேச தலையீட்டை கோரும் பலஸ்தீன ஜனாதிபதி

மேற்குக் கரையில் அதன் அதிகாரங்களை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்த புதிய நடவடிக்கைகளில் இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீனிய நிலத்தை பெறும் முறையை எளிதாக்குதல் மற்றும் பலஸ்தீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் இஸ்ரேலிய அதிகாரிகளின் அதிகாரங்களை அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் இஸ்ரேலின் இந்த தீர்மானம் ஆபத்தானது என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலையீட்டையும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் ஜோர்டான் வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன்
சட்டவிரோத இறையாண்மை மற்றும் குடியேற்றங்களை நிலைநிறுத்தும் முயற்சி என்றும் கூறியுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குடியேறிகளுடன் மோதலை தீவிரப்படுத்தவும் மேற்குக் கரையில் உள்ள ஹமாஸ் குழு பலஸ்தீனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!