உலகம் செய்தி

குவைட்டில் மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்

குவைட்டில் மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவம், அமெரிக்கா மற்றும்  இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தும் போரின் 35 வது நாளில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்பு இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டாலும், சேதத்தின் முழுமையான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன் சில மணி நேரங்களுக்கு முன்பு, Mina Al-Ahmadi Refinery (மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை) மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பல செயல்பாட்டு பிரிவுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் குவைட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு பின் தீயணைப்பு மற்றும் அவசர உதவி குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. காற்றின் தரத்தையும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த சுத்திகரிப்பு ஆலை மூன்றாவது முறையாக குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் மக்கள் “உயர் எச்சரிக்கை நிலையில்” இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், குவைட்  மற்றும் ஈரான் இடையிலான புவியியல் நெருக்கம்   காரணமாக, இத்தகைய தாக்குதல்களுக்கு குவைட் எளிதில் இலக்காக மாறக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, குவைட் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக KUNA எச்சரித்திருந்தது. ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் போது ஏற்பட்ட வெடிப்பு சத்தங்களும், சைரன் ஒலிகளும் நாடு முழுவதும் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைட் மற்றும் வளைகுடா நாடுகள் கடல்நீரை குடிநீராக்கும் முறையை பெரிதும் சார்ந்துள்ளதால், இத்தகைய ஆலைகள் மிக முக்கியமானவை. மார்ச் 30 ஆம் திகதி நடந்த முந்தைய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல்களில் தங்களுக்குச் சம்பந்தமில்லை என்று ஈரான் மறுத்து, குற்றச்சாட்டை இஸ்ரேலுக்கு மாற்றியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!