உலகம் செய்தி

ராணுவ தளத்தை தாக்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற போராட்டங்களின் போது ராணுவ தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமீர்ஹொசைன் ஹதாமி Amirhossein Hatami என்ற குறித்த நபர், அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியதோடு பாதுகாப்புப் படையினருக்கு எதிராகச் செயல்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மீறியதற்காக அவர் மீது இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானின் நீதித்துறை மற்றும் ஊடகங்கள் இந்த மரணதண்டனைச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆட்சி மாற்றம் கோரிய போராட்டங்களாக அவை இருந்தன.

போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்தது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளே போராட்டங்களை தூண்டிவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி இருந்தது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!