இலங்கை விமானத்தில் உலகப்புகழ் பெற்ற தமிழ் பாடகி Dhee…

மார்ச் 28 ஆம் தேதி கொழும்பிலிருந்து சிட்னிக்கு சென்ற விமானத்தில் திறமையான பாடகியான dhee பயணித்ததை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறி அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
தீட்சிதா வெங்கடேசன் என்பவர் தான் தீ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டு தமிழ் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படத்துறையில் பல பாடல்கள் பாடுகிறார்.
தீட்சிதா 1998 ஜூன் 27 இல் ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் இலங்கைத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவரது தாயார் மீனாட்சி ஐயர் சந்தோஷ் நாராயணனை மறுமணம் செய்து கொண்டார்.
இவருக்கு சுதீக்ஷன் என்ற மூத்த சகோதரர் உண்டு. இவர் தனது கல்வியின் இடைவேளையின் போது சந்தோஷ் நாராயணன் ஆல்பங்களான பீட்சா II: வில்லா (2013) மற்றும் குக்கூ (2014) ஆகிய திரைப்படங்களில் இரண்டு பாடல்களைப் பாடி தன்னை ஒரு பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
2021ஆம் ஆண்டு “எஞ்சாயி எஞ்சாமி” என்ற பாடல் மூலம் இவர் உலகளவில் பிரபல்யமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.