ஆஸ்திரேலியா உலகம்

ஈரான் வீராங்கனைகளுக்கு புகலிடம் வழங்கியது ஆஸ்திரேலியா!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரானின் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு ஆஸ்திரேலியா Australia புகலிடம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரை, வீராங்கணைகள் நேற்றிரவு சந்தித்துள்ளனர். இதன்போது உரிய ஆவணங்களில் ஆவணங்களிடம் கைச்சாத்திடப்பட்டு, மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அடைக்காலம் வழங்காதபட்சத்தில் தமது நாடு அவர்களை பொறுப்பேற்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

மே தினக் கூட்டத்தை கைவிடுகிறது மொட்டு கட்சி!

  • March 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி இம்முறை மே முதலாம் திகதி மேதினக் கூட்டம், பேரணியை என்பவற்றை நடத்தாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “மே முதலாம் திகதி இம்முறை பூரணை தினம் வருகின்றது. எனவே, அன்றைய நாளில் கட்சியால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படமாட்டாது. எனினும்,மக்கள் கூட்டம் மற்றும் பேரணி பிரிதொரு நாளில் நிச்சயம் நடத்தப்படும். மக்கள் ஆதரவு இல்லை […]

உலகம் செய்தி

11 ஆவது நாளாக தொடரும் போர்: வளைகுடா நாடுகளுக்கு ஆஸ்திரேலியா இராணுவ உதவி!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் 11 ஆவது நாடாக நீடிக்கும் நிலையில், அப்போர் உலகளவிலும் தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றது. ஈரானின் புதிய உச்ச தலைவரையும் கொல்வதற்கு இஸ்ரேல், அமெரிக்கா தீவிரம் காட்டிவரும் நிலையில், மறுபுறத்தில் ஈரானும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. இந்நிலையில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் Drone தாக்குதல்களிலிருந்து பாரசீக வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பதற்காக, ஆஸ்திரேலியா Australia இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதற்கமைய பிரதமர் Anthony Albanese, வான்வெளி கண்காணிப்புப் பணிகளுக்காக E-7A வெட்ஜெடைல் விமானத்தையும் 85 இராணுவ […]

இலங்கை செய்தி

மின்சார சபையை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இன்று முதல் அமுல்

  • March 9, 2026
  • 0 Comments

இலங்கை மின்சார சபையை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இன்று(09) முதல் அமுலுக்கு வருகின்றது. 2024 ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் குறிப்பிட்ட ஏற்பாடுகள் தவிர்ந்த ஏனைய ஏற்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை பொறுப்பளித்து 06 நிறுவனங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை குறிப்பிட்டு அண்மையில் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. வர்த்தமானிக்கமைய மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அலுவலகங்களுக்கு செல்லும்  ஊழியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

  • March 9, 2026
  • 0 Comments

கொவிட் 19 இற்கு பிறகு, பிரித்தானியாவில் அலுவலகங்களுக்கு செல்லும்  ஊழியர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ரெமிட் கன்சல்டிங் ஆலோசனை மற்றும் தரவுக் கண்காணிப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, சராசரி அலுவலக வருகை கடந்த மாதங்களில் 40 முதல் 44 வீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலுவலக வருகை அதிகரித்தாலும், ஊழியர்கள்  வேலை செய்யும் சூழல் தரத்தை முக்கியமாக கருதுவதாகவுதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்

  • March 9, 2026
  • 0 Comments

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான  Gary Kirsten நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ICC ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு […]

செய்தி

பூசகர் வெட்டிக் கொலை: நயினாதீவில் பயங்கரம்!

  • March 9, 2026
  • 0 Comments

யாழ்.நயினாதீவல் Nainatheevu பூசகர் ஒருவர் வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பயங்கரச் சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. தொழில் தொடர்பில் இரு பூசகர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு வாள் வெட்டுவரை சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயேமற்றைய பூசாரி பலியானார் எனக் கூறப்படுகின்றது. இக்கொலைச் சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இலங்கை செய்தி

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல்

  • March 9, 2026
  • 0 Comments

கைதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்

இலங்கை செய்தி

எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர்

  • March 9, 2026
  • 0 Comments

உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கடந்த நெருக்கடி ஆண்டுகளை விட இலங்கை தற்போது சிறந்த நிலையில் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்புகள் அதிகரித்துள்ளதுடன், பணவீக்கம் தற்போது 1.6 சதவீதமாக காணப்படுவது பொருளாதாரத்திற்கு பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது எனவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால், பெட்ரோலிய விலை உயர்வு […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரானிய கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்!

  • March 9, 2026
  • 0 Comments

ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் Australia. தஞ்சம் asylum கோரியுள்ளனர் என தெரியவருகின்றது. 2026 மகளிர்  ஆசியக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்டில் Gold Coast பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற குழு ஆட்டத்தில் ஈரான் அணி தோல்வி அடைந்தது. இதனால் உலகக்கிண்ண தொடரில் இருந்து அவ்வணி வெளியேறியது. ஐந்து வீராங்கணைகள் போட்டியில் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால், அவர்கள் தாயகத்தில் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள […]

error: Content is protected !!